பொதுவாக கோயில்களில் விஐபிக்கள் தரிசனம்,முக்கிய பிரமுகர்களுக்கு தனி பாதை,தனி மரியாதை ஆகியவை இருந்து வரும் நிலையில், கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே என்றும் மாறாக மனிதனுக்கு அல்ல எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சண்டிவீரன் கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அஅதில் சாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது சட்டத்திற்கு எதிரானது […]
புத்தாண்டு அன்று கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கோவில்களில் பக்தர்கள் வழிபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புத்தாண்டு காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று அதிகாலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக பலர் கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு புத்தாண்டையெட்டி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. […]
கோயிலில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கோயிலில் பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர ஏற்பாடு செய்யக் கோரிய வழக்கில் இத்தகைய கருத்தை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி பேருந்து நிலையத்திலேயே இடைத்தரகர்களால் ரூ.500 வசூலிக்கப்பட்டதாக மனுதாரர் புகார் அளித்திருந்த நிலையில்,ஆண்டவர் முன் அனைவரும் சமம்.எனவே,கோவிலில் பக்தர்களுக்கும்,தெய்வத்துக்கும் இடையில் […]