திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்க பதிவில், கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்த வித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பேருந்து நிலையத்தை சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றியது திமுக அரசு. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து நாற்பது நாட்கள் கடந்தும், இன்னும் […]
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி நிலைப்பாடு குறித்த பேச்சு வார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன. ரூ.3440 கோடி முதலீடுகள் முதல் பிரதமர் மோடி, நடிகர் விஜய் வரையில்…. முதல்வரின் கருத்துக்கள்..! இந்நிலையில் தற்போது மறைந்த விஜயகாந்த் அவர்களின் கட்சியான தேமுதிக இந்த தேர்தலை எவ்வாறு கையாள போகிறது என கேள்விகள் இருந்த […]
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.அதன்படி,நாட்டு தக்காளி ஒரு கிலோ ரூ.42-க்கு விற்கப்படுகிறது.மேலும்,பெங்களூரு தக்காளி கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ரூ.35-க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதே சமயம்,முட்டைகோஸ் ஆனது கிலோ ரூ.20-ரூ.25க்கும்,ஒரு கிலோ காலிபிளவர் ரூ.18-ரூ.20க்கும் ,உருளைக்கிழங்கு கிலோ ரூ.20 முதல் ரூ.26 வரை என கணிசமாக உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் காய்கறிகளின் வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பால் […]
கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு. தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில் இன்று காலை 4 மணி முதல் அடுத்த நான்கு வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த […]
தக்காளி விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா..? நீதிமன்றம் கேள்வி. கொரோனா கட்டுப்பட்டால் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக்கோரி பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. எங்கள் சங்கத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் 150, 300, 600 சதுர அடி கொண்ட கடையை வைத்துள்ளவர்கள் தான் உள்ளனர். 1200 முதல் 2400 பரப்பளவு சதுர அடி கொண்ட […]
தமிழகத்தில் ஆப்பிளுக்கு இணையாக விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி விலை தற்போது ரூ.30 அளவில் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வாகும்.ஏனெனில், தக்காளி விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்து பல பகுதிகளில் சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால்,கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் […]
தமிழகத்தில் சென்னை,மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தக்காளி விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செடியில் உள்ள தக்காளி அழுக தொடங்கி உற்பத்தி குறைந்துள்ளது.மேலும்,வெளியூர் வரத்தும் குறைந்துள்ளது. இந்நிலையில்,தமிழகம் முழுவதும் தக்காளி விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி,சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடந்த வாரம் 1 கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டு வந்த தக்காளி விலை தற்போது இரு மடங்காக உயர்ந்துள்ளது. […]
கோயம்பேட்டில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது, பயணிகள் குறைவாக இருந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து கோயம்பேட்டில் வைத்து திடீரென தீ பிடித்து இருந்துள்ளது. முன்னதாக சாலையோரம் சென்ற மக்கள் பேருந்தில் இருந்து கரும்புகை வந்ததை ஓட்டுனருக்கு தெரிவித்துள்ளனர். இதனை சுதாரித்து கொண்ட பயணிகள் பேருந்தில் இருந்து உடனடியாக பேருந்திலிருந்து கீழே இறங்கியுள்ளனர். அதன் பின் பேருந்தில் மளமளவென்று தீ பேருந்தில் பரவியுள்ளது. பயணிகள் குறைவாக இருந்ததால், […]