குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குற்றமற்றவர் என்ற சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிரான வழக்கை வருகின்ற அக்.26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர்.இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து,குஜராத் குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர்.அதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் […]