HMPV குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் பரவி வரும் HMPV தொற்று பாதிப்பு குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பரவி வரும் HMPV வைரஸ் குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம். இந்த வைரஸ் […]