உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி ஆஜர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டாவது முறையாக ஆஜரானார். கடந்த 25-ஆம் தேதி சுவாதி ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் இன்று மீண்டும் ஆஜரானார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன் சுவாதி ஆஜராகியுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் கடந்த 25-ஆம் தேதி […]
கோகுலராஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்று கோவை சிறையில் உள்ள யுவராஜ், நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 2015ஆம் ஆண்டு கோகுல்ராஜ் எனும் பொறியியல் பட்டதாரியை கொலை செய்த வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு யுவராஜ் கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகிறார். இந்நிலையில், ஏற்கனவே நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நீதிபதியை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. […]
தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீட்கப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கடந்த 2019 மே 5 முதல் […]