இலங்கை தலைநகர் கொழும்புவில், காலிமுக திடலில் போராடி வந்த போராட்டக்காரர்கள் முழுவதும் வெளியேறிவிட்டனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டம் வெடித்தது. பொதுமக்கள் , மாணவர்கள் என பல்வேறு போராட்ட குழுவினர் , கொழும்புவில் உள்ள காலிமுக திடலில் போராட்டம் ஆரம்பித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த போராட்டம் தொடர்ந்தது. அதனை தொடர்ந்து , அரசு மாளிகையில் போராட்டம், முக்கிய தலைவர்கள் ஓட்டம் , அரசியல் மாற்றம் என அடுத்தடுத்து உலக நாடுகளை […]
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், […]