கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மருதமோன்பள்ளி சாலையில் ஒயூர் பகுதியில் சாரா ரெஜி எனும் 6 வயது சிறுமி நேற்று மாலை சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். மாலை வழக்கம் போல தான் செல்லும் டியூசனுக்கு அந்த சிறுமி, தனது 8 வயது சக மாணவனுடன் சென்றுள்ளார். அப்போது வெள்ளை நிற மாருதி டிசையர் காரில் வந்த ஒரு கும்பல் சிறுமியை மாலை 4.45 மணி அளவில் கடத்தியுள்ளது. அதனை 8 வயது சிறுவன் தடுக்க முற்பட்டுள்ளான். […]
கேரளாவில், நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை களைய சொல்லி கண்காணிப்பாளர் சோதனை நடத்தியுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் எழுதப்படும் நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் இந்திய முழுவதும் ஏராளமான மாணவ மாணவிகள் எழுதினர். கடும் சோதனைக்கு பிறகே மாணவ மாணவிகள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில், கேரளாவில், கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்விற்கு வந்த மாணவிகளின் உள்ளாடையை களைய சொல்லி சோதனை நடைபெற்றதாம். […]
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ள நிலையில்,கேரளாவின் கொல்லம் பகுதியில் 85 குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு,கொல்லம் பகுதியில் தக்காளி வைரஸ் என்ற புதிய தொற்று பரவி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,தக்காளிக்கும்,தக்காளி வைரஸ் தொற்றுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும்,மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் […]
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தால் 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள கடற்பகுதியில் 5 நாட்டிகல் மைல் தொலைவில் மீனவர்கள் படகில் மீன் பிடித்துள்ளனர். பின்னர் கரைக்கு மீனவர்கள் திரும்பியுள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது. இந்த படகில் மொத்தமாக 16 மீனவர்கள் பயணித்து உள்ளனர். இந்த படகு விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், மீதமுள்ள 12 மீனவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து […]