உத்தரபிரதேசம் மாநிலம் புலந்தாகர் என்ற ஊரைச் சேர்ந்தவர் வகீல். இவரது மனைவி பெயர் யாஸ்மின். வகீல் உத்தரபிரதேச மாநிலம் சகரான் பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு தனது மனைவியையும் அழைத்து சென்று அவருக்கு தொழிற்சாலை நிர்வாகம் ஒதுக்கி கொடுத்த வீட்டில் இருவரும் இருந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து கணவன் – மனைவி இருவரையும் அந்த வீட்டை விட்டு காலி செய்யும் படி அந்த தொழிற்சாலை […]
நம் அண்டை நாடான சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தெற்காசியவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடாக நம் அண்டை நாடு பாகிஸ்தான் உள்ளது. ஆனால்,இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி 30ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கு 26 நாட்களுக்கு பிறகுதான் […]
கோரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துள்ளது. எனவே அரசு அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு , இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை. இதனால் இந்தியாவில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நோய் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு பொருளாதார சிக்கல்களில் இந்தியா தற்போது சிக்கியுள்ளது. எனவே இதற்க்காக பிரதமர் மோடிநாட்டு மக்களிடம் நிதியுதவி அளிக்குமாறு தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வைரஸின் தீவிரத் தன்மையை உணர்ந்த தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள், தங்களது கிராமங்களில் பாரம்பரிய முறைப்படி கொரோனாதடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்படி ,மதுரை மாவட்டம் பேரையூருக்கு அருகில் உள்ள குமராபுரம் மற்றும் சிலைமலைபட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் பாரம்பரிய முறைப்படி கிராமத்தை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து வருகின்றனர். அவர்கள் மஞ்சள் பொடியை நீரில் கலந்து, அதனுடம் […]
உலகம் முழுவதும் கொடிய கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், நேற்று மட்டும் 8 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கொரோனோ பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் தமிழகத்திலேயே முதல் நபராக பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளார். அயர்லாந்தில் இருந்து சென்னைக்கு கடந்த 17-ம் தேதி வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், […]
கொரோனா வைரஸ் மூலம் ஏற்படும் கோவிட் -19 நோயின் இந்தியாவின் முதல் படங்கள் புனேவில் உள்ள இந்திய மருத்துவ விஞ்ஞானிகளால், டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி இமேஜிங்கை முறையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளன. அந்த படங்கள் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டு உள்ளன. கொரோனாவை ஏற்படுத்தும் சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் சார்ஸ்-கோவ் -2 இன் படங்கள்,கடந்த ஜனவரி 30, 2020 அன்று இந்தியாவின் முதல் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சோதனை தொண்டைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டவை. […]
மதுரை மாநகரில் கோரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருத்துவப்பணிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய அரசு மருத்துவமனை செவிலியர்கள் வந்த ஆட்டோவிற்கு மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து காவலர்கள் ரூ.500 அபராதம் விதித்தனர். அவர்கள் அடையாள அட்டைகளை காட்டியும் கொரோனா தடுப்பு பணிக்கு சென்ற அவர்களிடம் காவலர்கள் கருணையில்லாமல் நடந்து கொண்டதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவப்பணி, காவல்பணி, […]
இந்தியாவில் கொடிய கோரோனோவின் பிடியில் சிக்கி இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர். 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 42 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 26பேர். இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள், தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியவசிய பொருள்களை மட்டும் மக்கள் பயன்படுத்தும் […]
சென்னை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தூய்மை காவலர்கள் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சி பகுதிகளில் சிறிய மோட்டாா் பொருத்திய தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், ட்ரோன் கருவி மூலம் வானில் பறந்தபடியே ஆள்கள் செல்ல முடியாத இடங்களுக்கும் சென்று கிருமி நாசினிகளைத் தெளிக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. ட்ரோன் மூலம் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 144 தடைஉத்தரவு பிறப்ப்பித்துள்ளது. இதேபோல், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானம் மூலம் பயணிகள் வர மத்திய அரசு தற்போது தடை விதித்தது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் உயர் கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது பிலிப்பைன்ஸில் கொரோனா தாக்கம் அதிகளவில் உள்ளதால், இந்திய மாணவர்கள் […]
கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், மால்கள், திரையரங்குகள் மட்டுமின்றி நாட்டின் எல்லைகளும், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால், பெரிய நகரங்களில் மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் தேவையில்லாமல் ரயில் நிலையங்களுக்கு மக்கள் செல்வதை தடுக்கும் வகையில் ரயில் பிளாட்பாரம் டிக்கெட் விலையை இந்திய ரயில்வே இரண்டும் […]
அப்பாவி மக்களின் உயிரை குடிக்கும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று நோயைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தடுப்புப் பணிக்கு முகக்கவசங்கள், மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள் உள்ளிட்ட தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் உடனே கலந்தாலோசித்து, அவர்களுக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது […]
கொரோனா’ வைரஸ் தொற்று பாதிப்பு தற்போது உலகளாவிய பிரச்னையாக உருமாறியுள்ள நிலையில், அதை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து, ‘ஜி – 20’ அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், இன்று (மார்ச் 26) இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.இந்த ஆலோசனை ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நடக்க இருக்கும் இந்த சந்திப்பில்,நமது பாரத பிரதமர், நரேந்திர மோடியும் பங்கேற்கிறார். உலகெங்கும் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அனைத்து நாடுகளும் தீவிர […]
கோரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கியுள்ள 283வீடுகளில் 24 மணி நேரமும் சீர்மிகு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், கோரோனா வைரஸ் பாதித்தநபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகிய்ய நபர்கள் கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனைகளிலும், அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். வீடுகளில் தங்கியுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உட்பட யாரிடமும் அவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், […]
இந்திய மருத்துவ ஆய்வுக்குழுவின் தலைமை இயக்குநர் திரு. பல்ராம் பார்கவா அவர்கள், கோரோனா வைரஸ் சந்தேக நோயாளிகள் மற்றும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்ற மருந்தை எடுத்துக் கொள்ள பரிந்துரை மேற்கொண்டார். இதற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகமும் அனுமதியளித்தது. அவசரச் சூழ்நிலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டுக்கு இந்த மருந்தினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து மற்றும் இதிலிருந்து தயாரிக்கப்படும் மற்ற மருந்துகளின் ஏற்றுமதிக்கு […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரமேஷ் உமாபதி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கொரோனா வைரஸ் பரவாமலிருக்க தமிழக அரசு 144 தடை […]
இந்தியாவில் ‘கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாராளுமன்றம் மற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்க வேண்டாம்’ என, பல்வேறு கட்சிகளின் சார்பில் அந்த கட்சியினருக்கு உத்தரவிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம் என்று திமுக கட்சி கொறடா திரு. சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். எனவே கொரோனா பரவல் காரணமாக வெளிமாவட்ட எம்எல்ஏ-க்கள் வர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். இதேபோல்., திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், லோக்சாபாவில், […]
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிக்க மற்றும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு சிகிச்சை பிரிவு அல்லது அறை வைத்து பராமரிக்க வேண்டும். பரிசோதனையின்போது அந்த நபர் கடந்த 28 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்றிருந்தாலோ அல்லது வெளிநாட்டுக்கு சென்று கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் இருந்தால் அவரை 14 நாட்கள் வீட்டில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தவேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி […]
நம் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தின் துமகூரை சேர்ந்த ஆசிரியர் ரிஸ்வான் பாஷா. இவரது மகன் சாஹில் ஹுசேன். இவர், கடந்த மூன்று ஆண்டாக சீனாவின் வான்லி மாவட்டத்தில் உள்ள, ‘நாச்சிங் நகரில், ‘ஜியாங்சி யுனிவர்சிட்டி ஆப் டிரடிஷனல் அன்ட் சைனிஸ் மெடிசன்ஸ்’ பல்கலைக்கழகத்தில் தங்கி மருத்துவம் படித்து வருகிறார். தற்போது சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பரவியதை தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் படிக்கும், 1,000க்கும் மேற்பட்டோர், சொந்த நாட்டிற்கு சென்று விட்டனர். சில மாணவர்கள், ஊழியர்கள் மட்டுமே, பல்கலைக்கழகத்தில் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை தொடங்கி பல உயிர்களை காவு வாங்கிவரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உலகமே ஈடுபட்டு வருகிறது. இதே போல், புதுச்சேரியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறும்போது, ‘‘புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை, […]