கொரோனா பாதித்த இருவருக்கும் உடல் ரீதியான தொந்தரவு ஏதும் இல்லாததால் அச்சப்பட தேவையில்லை என சிவகாசி மருத்துவத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பி.எஃப்-7 தொற்றா என கண்டறிய சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் இலந்தைகுளம் கிராமத்தில் சிவகாசி மருத்துவத்துறை துணை […]
கொரோனா பரிசோதனைகளை சென்னை விமானநிலையத்தில் நேரில் ஆய்வு செய்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அண்டை நாடுகளில் கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சற்று தீவிரமடைந்துள்ளன. இதற்கான அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு அறிகுறி இருப்பதற்காக சந்தேகிக்கும் நபர்களுக்கு மற்றும், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து நாடுகளில் இருந்து வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய […]
சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம். சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாய்வில் தொடங்கியுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் சந்தேகப்படும் நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அந்ததந்த மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நாடுகளில் இருந்து […]
பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அண்டைநாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் கொரோனவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. அதன்படி, பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை […]
தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்றும், ஏற்கனவே முந்தைய கொரோனா காலகட்டத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளது. எனவே பொதுமக்கள் […]
பீகாரில், விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிக்கும் குறிப்பிட்ட பயணிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யபட உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பீகாரில், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யபட வேண்டுமென பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரிசோதனை என்பது அனைவருக்கும் செய்யப்படவில்லை. சளி, இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் […]
மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது. கடந்த ஆறு மாதத்தில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி […]
மும்பை:உக்ரைனில் இருந்து மும்பை வருபவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்காவிடில்,RTPCR பரிசோதனை செய்யப்படும் என மும்பை விமான நிலையம் அறிவிப்பு. உக்ரைன் -ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனில் இருந்து சாலை வழியாக ருமேனியாவுக்கு இந்திய மாணவர்கள் மற்றும் மக்களை வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்தது.இதனைத் தொடர்ந்து, உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர ருமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் ஏர் […]
ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இவர் வாரங்களாக பொதுக்கூட்டங்களில் […]
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் தற்பொழுது ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்திலும் கோரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பரிசோதனைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தமிழக அரசின் பரிந்துரைப்படி […]
கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் கடந்த 12-ஆம் தேதியும், 19ஆம் தேதியும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் 12ஆம் தேதி நடத்தப்பட்ட தடுப்பூசி […]
கான்பூரில் கைதிகளுக்கு நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனை முடிவறிக்கையில் சிறுமிகள் 7 பேர் கர்ப்பம் என்ற தகவல் நிர்வாகத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கான்பூரில் மாநில அரசு நடத்தும் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட 57 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.பரிசோதனையில் சிறுமிகள் 7 பேர் கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் சம்பந்தப்பட்ட அனைவரும் காப்பகத்தில் தங்க வைக்கப்படுவதற்கு முன்பாகவே கர்ப்பமாக இருந்தனர், மேலும் மருத்துவ ரீதியாகவும் பரிசோதிக்கப்பட்டதாக தெரிவித்த […]