பீகாரில், கயாவில் உள்ள விமான நிலையத்தில் கொரோனா சோதனை செய்ததில் நான்கு வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை எடுக்கபட்டு வருகிறது அதன்படி, பீகாரில், கயாவில் உள்ள விமான நிலையத்தில் சோதனை செய்ததில் நான்கு வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர்கள் […]
ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 3.7 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவின் உஹான் மாகாணத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இந்த தொற்று கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்து இருந்தது. இந்த நிலையில் சீனா, அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. […]
இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் கொரோனா தொற்று உறுதி. கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பாஜக வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனையடுத்து இமாச்சல பிரதேச முதல்வராக கடந்த 11-ஆம் தேதி சுக்வீந்தர் சிங் பதவியேற்றார். இந்த நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை ஓமிக்கிரான் வைரஸின் XBB எனும் துணை வகை புதிய வைரஸ் வகைகள் மருத்துவ ரீதியாக தீவிரமானவை என பரிந்துரைக்க எந்த நாட்டிலிருந்தும் தரவுகள் வெளிவரவில்லை என WHO-ன் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன்தெளிவுபடுத்தினார். உலக சுகாதார அமைப்பான WHO-ன் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கடந்த வியாழகிழமை அன்று ஓமிக்கிரான் புதிய வகை பற்றி புதிய தகவல்களை பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், உலகின் சில நாடுகளில் COVID-19 வைரஸின் புதிய மாறுபாடான […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 461 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 537 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழகம் முழுவதும் 5,339 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 2,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 2,280 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2,269 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 729 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சிகிச்சை […]
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா […]
தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 2,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 2,448 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2,280 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 755 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சிகிச்சை […]
தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 2,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 2,722 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2,671 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 844 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சிகிச்சை […]
கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மாணவர்கள், சீனாவில் தங்கள் கல்வியைத் தொடர சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய மாணவர்கள் சீனாவில் தங்களது படிப்பை விட்டுவிட்டு, இந்தியாவிற்கு வந்தனர். சீன பல்கலைக்கழகங்களில் சுமார் 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் பயின்று வந்த நிலையில் அவர்கள் மீண்டும் சீனாவுக்குச் சென்று தங்களது படிப்பை தொடர இயலாத சூழலில் இருந்தனர். இந்த நிலையில், கொரோனா […]
சென்னை ஐஐடி-ல் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எண்ணிக்கை 145-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை ஐஐடி-யில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து மெகா தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று 55 […]
டெல்லியில் இருந்து திரும்பிய ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து திரும்பிய […]
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ஒபாமா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா நேர்மறை சோதனை செய்ததாகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக பெரிய அளவிலான பாதிப்பு இல்லை எனவும், தற்போது நலமாக உள்ளதாகவும் ஒபமா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா விரைவில் குணமடையவும், பூரண நலம்பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.’ பதிவிட்டுள்ளார். My best […]
மதுரை:தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து,அமைச்சர் மூர்த்தி அவர்கள் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக முதலமைச்சர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக தற்போது நடைபெற்ற மதுரை மாவட்டத்திற்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி அவர்கள் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. […]
மும்பை:பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பாடகியும்,”இந்தியாவின் இசைக்குயில்” எனப் போற்றப்படுபவருமான லதா மங்கேஷ்கர்,தனது நான்கு வயது முதல் தற்போது வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் நீடித்து வருகிறது. இந்நிலையில்,லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,அவரது […]
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகைசால் தமிழர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் விரைவில் முழுநலம் பெற்றுத் திரும்பிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு இரண்டு தினங்களாக லேசான காய்ச்சல் இருந்த காரணத்தினால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதனையடுத்து,அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.இதனைத் தொடர்ந்து,சிகிச்சைக்காக […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை எவரெஸ்ட் சிகரம் போல் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், ஓமைக்ரான் பரவலால் பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அடையாறில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உலகம் […]
கொரோனா பரவல் எதிரொலியாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓமைக்ரான் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் எதிரொலியாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், எனது ஊழியர் ஒருவருக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் பரிசோதனை செய்ததில், நெகட்டிவ் என சோதனை முடிவுகள் வந்தது. இருப்பினும் நான் தனிமைப்படுத்தப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் […]
பெல்ஜியத்தில் உள்ள பைரி டைசா உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிங்கத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் உள்ள பைரி டைசா பூங்காவில் உள்ள 4 சிங்கங்களுள் ஒன்றான டாணா எனப்படும் பெண் சிங்கத்திற்கு காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை இருந்துள்ளது. பின்னர் சோதனை செய்ததில் இந்த பெண் சிங்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிங்கத்திற்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அங்கிருக்கும் சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிங்கங்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று […]