சென்னை மாநகரில் தமிழக அரசின் உத்தரவுகளை மீறியும் சீர்மிகு காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறியும் வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளை கையெடுத்து கும்பிட்டு போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து வருகிறார். அவரது வேண்டுகோளால் மனம் நெகிழ்ந்த வாகன ஓட்டிகளில் ஒருவர், அவரது காலில் விழுந்தார். நெகிழ்ச்சியான் இந்த நிகழ்வு அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே நடந்தது. கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. […]
இந்தியாவின் மாநிலங்களவை என்று அழைக்கப்படும் ராஜ்யசபாவில் பதவிக்காலம் முடிந்த 55 காலி இடங்களுக்கான தேர்தல், நாளை நடைபெறும் என, அறிவிக்கப் பட்டிருந்தது. இதில், 37 வேட்பாளர்கள், ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இந்நிலையில், மீதி, 18 இடங்களுக்கான தேர்தல், நாளை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், ராஜ்யசபா தேர்தலை, வரும் 31 ம் தேதிக்குப் பின் நடத்த, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ராஜ்யசபா உறுப்பினர்கள் […]
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், வீட்டிற்கு செல்லாமல், மருத்துவமனையிலேயே தங்க சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அவசரகால கட்டுப்பாட்டு மைய அதிகாரி, திரு. நாகராஜன் அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சையளிக்க கூடியவர்களுக்கு, அந்த பாதிப்பு நேரடியாக பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. எனவே, சுழற்சி முறையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவப்பணிய்யாளர்களை வீட்டிற்கு அனுப்பக் கூடாது […]
உலகையே காவு வாங்கி வரும் கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக கொரொனோவிற்க்கு எதிராக தடுப்பூசியை தற்போது அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. இதை மதிப்பீடு செய்து மருத்துவ சோதனை செய்யும் பணி அமெரிக்காவில் இன்று (திங்கள்கிழமை) தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையின் பங்கேற்கும் முதல் பங்கேற்பாளருக்கு இன்று பரிசோதனை தடுப்பூசி போடப்பட உள்ளது. எனினும் இது இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு அறிவிக்கவில்லை. சியாட்டிலிலுள்ள கைசர் நிரந்தர வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வரும் இந்த […]
கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கி வரும் நிலையில் இந்நோய் பரவாமல் தடுக்க பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தனிகவனம் செலுத்தி ஈடுபட்டு உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் சென்னை உள் பட தமிழ்நாடு முழுவதும் […]