‘மக்களிடம் லஞ்சம் வாங்க மாட்டோம்’ – கருணாநிதி மற்றும் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்ற திமுக வேட்பாளர்கள்…!
நெல்லை, கொண்டசமுத்திரம் ஊராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், மக்களிடம் லஞ்சம் வாங்க மாட்டோம் என்று கருணாநிதி மற்றும் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றனர். தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக […]