கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. கார் ஓட்டுநர் கனகராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக சசிகலா, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கு நேற்று மாலை வந்தடைந்தார். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா பெயரில் தியான மடம் மற்றும் சிலை அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக, சசிகலா அங்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சசிகலா, எஸ்டேட் […]
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று புறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அடுத்த சில நாட்களிலேயே அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர், சொத்துக்குவிப்பு […]
மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை சசிகலாவிடம் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது இந்த விசாரணை நிறைவடைந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 217 பேரிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர். இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நேற்றும், இன்றும் […]
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வாளையார் மனோஜ்-க்கு நிபந்தனை ஜாமின். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறையிலுள்ள வாளையார் மனோஜுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் உத்தரவாத ஆவணங்களை நீதிமன்றத்தில் ஆஜராகி தாக்கல் செய்ததால் ஜாமின் வழங்கப்பட்டது. இரண்டு பேர் அளித்த உத்தரவாதத்தை ஏற்று மனோஜுக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உதகையை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது, வாரம்தோறும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், நிபந்தனை ஜாமீனில் ஊட்டியில் இருந்த நிலையில், மறுவிசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் சாயனுக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து, சயான் கடந்த 17-ந் தேதி ஊட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ் ஆகியோரிடம் 3 […]