புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் ஆய்வுசெய்த ஆளுநர் தமிழிசை காலில் விழுந்து கெஞ்சிய கைதிகள். புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சிறை கைதிகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் சிறையில் இருப்பதாகவும், விடுதலை செய்யுங்கள் எனக் கூறியும் காலில் விழுந்து கெஞ்சி உள்ளனர். இதனையடுத்து ஆளுநர் தமிழிசை, கோரிக்கையை ஆலோசிப்பதாக உறுதி கொடுத்தார். தமிழிசை காலில் விழுந்த கைதிகளை போலீசார் தூக்கி விட்டனர்.
டெல்லியில் உள்ள திகார் சிறையில் 66 கைதிகளுக்கும் 48 சிறைத்துறை ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனவைரஸ் மீண்டும் தீவிரமாக பரவத் தொடங்கிய நிலையில் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 24 கடந்த மணி நேரத்தில் மட்டும் 1,68,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 6,000 சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருவதால் கட்டுக்குள் உள்ளது. எனினும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தற்போது தீவிரப்படுத்தி வருகின்றன. அதன்எதிரோலியாக க பஞ்சாப் மாநில சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து […]
ஈரானில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் கொரோனா தாக்கி 21 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை அங்கு 145 ஆக உயர்ந்தது. மேலும் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,823 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 49 பேர் வைரஸ் பாதிப்பிற்கு பலியானது அந்நாட்டிற்க்குஅச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவுவதால் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு பரவக்கூடாது என்பதற்காக […]