தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்வது ஆரோக்கியமானது அல்ல என கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய உணவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், 22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு […]
எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை கட்சியை விட்டு நீக்குகிறேன் என ஓபிஎஸ் பேட்டி. அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வந்தனர். இந்நிலையில்,கட்சியின் அடிப்படை உறுப்பினர்,பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழு அறிவித்துள்ளது.அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன்,ஜெசிடி […]
கைது நடவடிக்கைகளுக்கு அதிமுக அஞ்சாது என கே.பி முனுசாமி பேட்டி. கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 200 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பி.முனுசாமி, கைது நடவடிக்கைகளுக்கு அதிமுக அஞ்சாது என தெரிவித்துள்ளார். மேலும், அவதூறு கருத்துக்களை கூறினால் தினகரன் நீதிமன்றத்தில் நிற்க நேரிடும். தினகரன் மீது மானநஷ்ட வழக்கு தொடங்கப்படும். தனது இருப்பை காட்டவே சசிகலா பேசி வருகிறார் என தெரிவித்துள்ளார்.
சொத்துவரி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என குற்றம்சாட்டும் திமுக, மத்திய அரசின் உத்தரவை காண்பிக்க முடியுமா? என கே.பி.முனுசாமி என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சமாக 25 % முதல் அதிகபட்சமாக 150 % வரை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது.ஆனால்,இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்,சொத்து வரி உயர்வுக்குக் காரணமான விடியா திமுக அரசைக் […]
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 6 மாதங்களுக்குள் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வரும் என தினகரன் கூறி உள்ளார். ஜோதிடர் போல் தினகரன் நடந்து கொள்கிறார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சில சமயங்களில் ஏதேதோ கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஏற்கனவே திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து தமிழகம் முன்னேறவில்லை என சொல்லிக் கொண்டு இருக்கிறார். இன்று தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னிலையில் உள்ளது. அவர்களுடைய […]