வருமானத்தை விட கூடுதலாக ரூ. 11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு. அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய வீடு உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக,2016- 2021 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டதாகவும்,சென்னை உயர்நீதிமன்றம் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டதாகவும்,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில்,வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார் .இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது . ஒகேனக்கல் பகுதியில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைவதை தவிர்க்க செயற்கை நீர்வீழ்ச்சி ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக – அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .