மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆதார் இணைப்பு மூலம் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தாலும், மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிட வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு மூன்று வீடுகள் உள்ள இடங்களில் பொது (காமன் சர்வீஸ்) மின் இணைப்பிற்கு வணிக ரீதியிலான மின் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. […]
மக்களின் உயிரோடு விளையாடாமல் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் என சிபிஐ(எம்) வலியுறுத்தல். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் மசோதா தொடர்பாக சில விளக்கங்களை தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு தமிழக அரசு 24 மணிநேரத்தில் பதில் அளித்திருந்தது. இதற்கிடையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் காலாவதியானது. […]
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்ற நிலையில், வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றுவது அவசியம் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். தமிழக அரசு தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மழை வெள்ளத்தினால், தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5,000 இழப்பீடு வழங்குக. சென்னை போன்ற நகரங்களில் திமுக […]
சி.பி.ஐ(எம்) விமர்சனம் குறித்து சி.வி.சண்முகம் அறிக்கை அவதூறுச் சேற்றுக்குள் உண்மையை புதைக்கும் முயற்சியே என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள், நேற்று தூத்துக்குடி சம்பவம் குறித்து கோடிகளுக்கு விலை போன கம்யூனிஸ்டுகளுக்கு நாவடக்கம் தேவை என கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு கே.பாலகிருஷ்ணன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘சி.பி.ஐ(எம்) விமர்சனம் குறித்து சி.வி.சண்முகம் அறிக்கை அவதூறுச் சேற்றுக்குள் உண்மையை புதைக்கும் முயற்சியே என கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் […]
தூத்துக்குடி சம்பவம் குறித்து கோடிகளுக்கு விலை போன கம்யூனிஸ்டுகளுக்கு நாவடக்கம் தேவை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘வீதி வீதியாக உண்டியல் குலுக்கி சேர்க்கும் பணத்தில், டீ குடித்து கட்சிக்காக உழைத்த கம்யூனிஸ்ட் தொண்டர்களின் தியாகங்களை மண்ணில் போட்டு மிதிக்கும் வகையில் இன்றைக்கு தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து பல கோடிகளைப் பெற்று தங்கள் இயக்கத்தையே அறிவாலயத்தின் கொத்தடிமையாக மாற்றியுள்ளார்கள். தற்போதைய பொம்மை முதலமைச்சரின் குரலாக மார்க்சிஸ்ட் […]
இந்திய அரசாங்கம் என்பது பல மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்பு தான். – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ஐஐடியில் காசி – தமிழ்ச்சங்கம் விழாவுக்கான தொடக்க விழா நடைபெற்றது அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது கூறுகையில், ‘ எந்த ஒரு நாடும் மதம் சார்ந்து தான் இருக்க முடியும். அதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அழித்துவிட்டார்கள். அதனை மீட்டெடுக்கவேண்டிய […]
மக்களை அவமதிக்க துணிந்துவிட்டார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் இவ்வாறு பொருப்பற்று பேசுவது அவர் பதவிக்கு அழகல்ல என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கோவையில் நடந்தது திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல். இதை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிடமுடியாது என தெரிவித்திருந்தார். இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பயங்கரவாதத்தை உருவாக்கக் கூடிய இடமாக கோவை உள்ளது” என்று தமிழக ஆளுநர் ரவி […]
வாகன சட்டத் திருத்தம் மூலம் மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் அனைத்து விதமான விதி மீறல்களுக்கும் […]
தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரத்தில், அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று இறுதிநாள் கூட்டம் நடைபெறவுள்ளது. நேற்றைய கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்திக் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் […]
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை சிதைத்து, ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது ஒன்றிய அரசு என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்க்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் இந்தி மட்டுமே பயிற்று மொழி.ஆங்கில வழி கல்வி […]
தமிழகம் முழுவதும் அக்.11ம் தேதி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என அறிவிப்பு. அக்.11ம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்., மதிமுக, விசிக, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் பங்கேற்கிறது. இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் அக்டோபர் 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு […]
உணர்ச்சித் தூண்டல் அரசியலே போதும் என்ற மிதப்பில் மோடி ஆட்சி வெகுதூரம் சென்றுவிட்டது என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90% ஆக ஆக்கியுள்ளது. இதற்க்கு கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90% ஆக ஆக்கியுள்ளது. இதனால் வீட்டுக்கடன், வங்கிக்கடன் மற்றும் பிற EMI வட்டி விகிதம் உயரும். சாதாரண உழைப்பாளிகளின் துயரம் அதிகரிக்கும். ரூபாய் […]
திருமாவளவன் மற்றும் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் டிஜிபி-யை நேரில் சந்தித்து மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி மனு அளித்துள்ளனர். அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசிக சார்பில் நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கும், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கும் […]
ஆர்எஸ்எஸ்-யும், மதச்சார்பற்ற இயக்கங்களையும் அரசு ஒரே தட்டில் வைத்து பார்க்காது என நம்புகிறோம் என கே.பாலகிருஷ்ணன் பேட்டி. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்.2-ம் தேதி விசிக சார்பில் நடைபெறவிருந்த பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ்-யும், மதச்சார்பற்ற இயக்கங்களையும் அரசு ஒரே தட்டில் வைத்து பார்க்காது என நம்புகிறோம். காவல்துறை, அரசு தரப்பிலிருந்து சமூக நல்லிணக்க பேரணிக்கு […]
ஆ.ராசா எடுத்துச் சொன்னால் மட்டும் எதிர்ப்பு எழுவது ஏன்? சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் எழும் அதே சனாதன வெறிதானே? என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். இவரது பேச்சு சர்ச்சையான நிலையில், இவரது கருத்தை பாஜகவினர் ஒருபக்கம் விமர்சித்து வருகின்றனர். மறுபக்கம் அவருக்கு ஆதரவாகவும் அரசியல் தலைவர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த […]
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டியாக இருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என கே.பாலகிருஷ்ணன் பேச்சு. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மதுரையில் நடைபெறும் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டியாக இருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் சனாதான கும்பலுக்கு அடிமையாகி, உச்சநீதிமன்றம் கூட மிச்சப்படுமா என்ற நிலையில் இந்தியாவே வியக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் […]
அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவ மாணவியருக்கும் வழங்கப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். பள்ளி மாணவர்களுக்கு அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்னும் சில நாட்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மாணவியர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மாணவியர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது வரவேற்புக்குரியது. அரசுப் […]
சுங்க கட்டணத்தை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள 20 சுங்க சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்க்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,’ தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் 01.09.2022 முதல் 15 சதவீத கட்டண உயர்வை அமலாக்க ஒன்றிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போதே. […]
அனைத்து மக்களின் வாழ்விட உரிமையை பாதுகாக்க கிராம சபைகள் உறுதியேற்க செய்திட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். சுதந்திரத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறவுள்ள கிராம சபை கூட்டங்களில் விவாதிக்க வேண்டிய பொருள்களின் பட்டியலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் சுற்றறிக்கையில் அனுப்பியுள்ளார். அதில், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் ட்விட் செய்துள்ளார். சுதந்திரத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறவுள்ள […]
அண்ணாமலை ஒன்றும் ஆளுநரின் செயலாளரோ, செய்தி தொடர்பாளரோ அல்ல என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் மாளிகையில் ஆளுநரை ரஜினி சந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது?, ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று ரஜினி தெரிவித்ததால் என்ன தவறு எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக ஆளுநரை திரு ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்துள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் சந்தித்து […]