அமைச்சர் கே.என் நேருவுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. அனுமதியின்றி ஒன்று கூடி தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2016ல் திருச்சி பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி ஒன்றுகூடி பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தது தொடர்பாக கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குபதிவு செய்தனர். 40க்கு 40 உறுதி.. நாம் யார் என்பதை […]
திமுக கட்சியின் இளைஞரணி மாநாடு வரும் ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் வெகு தீவிரமாக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு நிகழ்வுகள் முந்தைய நாள் ஜனவரி 20ஆம் தேதி அன்று முதலே துவங்குகிறது. கடந்த 2007, டிச. 15ல் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இளைஞரணியின் 2வது மாநாடு சேலத்தில் டிச.17ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக இளைஞரணி […]
திமுக கட்சியின் இளைஞரணி மாநாடு வரும் ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் வெகு தீவிரமாக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு நிகழ்வுகள் முந்தைய நாள் ஜனவரி 20ஆம் தேதி அன்று முதலே துவங்குகிறது. இது குறித்து திமுக இளைஞரணி தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். தவழ்ந்து தவழ்ந்து செல்வதால் கால்வலி வருகிறது.! இபிஎஸ்-ஐ விமர்சித்த உதயநிதி.! அவர் கூறுகையில், கடந்த வருடம் […]
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கூறியிருந்த நிலையில் அதற்கு ஒருவரை தவிர 12 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர். தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றனர். சிறப்பு புலனாய்வு துறையினர் இந்த கொலை வழக்கை விசாரித்து வருகின்றனர். திருச்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு […]
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 9 பேர் இன்று நேரில் ஆஜராகி விட்டனர். அதில் 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர். தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றனர். சிறப்பு புலனாய்வு துறையினர் இந்த […]
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர்கள் வருவதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை அவசர அவசரமாக சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் போட்டு பளபளக்க வைத்தனர். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், அதனை வெளியேற்ற மழைநீர் வடிகால் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகின்றனர். அதில், சென்னை சைதாப்பேட்டையில் தான் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் […]
மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால், தற்போது சென்னையில் 16 சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்குவது தவிர்க்கபட்டுள்ளது. – அமைச்சர் கே.என்.நேரு தகவல். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் ஆங்காங்கே தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தலைநகர் சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர் பணியாற்றி வருகின்றனர். இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு நேரில் […]
தனது இருப்பை நிரூபிக்க ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார். – நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு. நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘ கடந்த வருடம் மழைநீர் தேங்கிய இடங்களில் தற்போது வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளதால், இந்தாண்டு மழைநீர் அதிகமாக தேங்கவில்லை. நேற்றிரவு முதல் மாநகராட்சி சார்பில் 19,500 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு […]
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 11 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சி மாவட்டம் கல்லணை அருகே கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. தமிழகத்தில் பிரபல ரவுடிகளை கண்காணித்து, அதில் முதற்கட்டமாக 20 பேரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, தற்போது அடுத்ததாக, […]
அதிமுக இருக்கும் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்று சேர விடாமல் பாஜக செயல்பட்டு வருகிறது என கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரும் 4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். சிறிய தவறுகளை கூட, பாஜக சேர்ந்தவர்கள் ஊதி […]
நாங்கள் ஒழுங்காக வேலை செய்தால் உங்களுக்கு வேலை பளு குறைவு. எங்களை மாதிரி ஆட்கள் வந்துகொண்டு தான் இருப்பார்கள். சில நேரம் சிரித்து பேசுவார்கள். சில நேரம் கோபப்படுவார்கள். – திருச்சியில் கே.என்.நேரு பேச்சு. இன்று திருச்சியில் நடைபெற்ற பொது சுகாதர ஆய்வு பணிகள் குறித்த மாநில ஆய்வு கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக அரசின் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டு பேசினார். அதில் குறிப்பிடுகையில், நாங்கள் ஜெயித்தால் மட்டுமே […]
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மழைநீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கபடும். – தமிழக அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார். இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்ய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் இந்த பணிகள் மிக வேகமாக நடைபெற்று […]
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை ஓரத்தில் கால் நனைக்கும் விதமாக நிரந்தரமாக நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே போல பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடற்கரைக்கு செல்வதற்கு ஏதுவாக நடை பாதை அமைக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்த நடைபாதை ஒரு கோடி மதிப்பில் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் சட்டம் ரத்து, விவசாயிகளின் உறுதியான ஓராண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் சட்டம் ரத்து, விவசாயிகளின் உறுதியான ஓராண்டுகால போராட்டத்திற்கு […]
அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் ‘நமக்கு நாமே திட்டம்‘ செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் “நமக்கு நாமே” திட்டம் செயல்படுத்தப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம்,சென்னை மாநகராட்சி, அனைத்து 14 மாநகராட்சிகள், அனைத்து […]
ஒரு சில நாட்களில் மாநகராட்சி, நகராட்சி பகுதி உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருக்கப்பட்டது. 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த நிலையில் இந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் […]