கடந்த சில தினங்களுக்கு முன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், புதுடெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) சேர்ந்தவர்கள் சிலர், அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆளுநர் அவர்கள், கேரளா முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றசாட்டுகளை முன்வைத்திருந்தார். அவர் கூறுகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இந்த சம்பவம் […]
புதுடெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்று கொண்டிருந்த போது, ஆளும் சிபிஐ(எம்)ன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவர்னர் ஆரிப் முகமது கான், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தற்செயலான சம்பவம் […]
கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் பாதுகாப்பு அதிகாரி வைத்திருந்த துப்பாக்கி வெடித்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் பாதுகாப்பு அதிகாரி வைத்திருந்த துப்பாக்கி திடீரென வெடித்துள்ளது. பாதுகாப்பு அதிகாரி சுத்தப்படுத்தும் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவின், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் விடி சாவர்க்கர், எம்எஸ் கோல்வால்கர் மற்றும் தீன்தயாள் உபாத்யாயா உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பிற்கான மூன்றாவது செமஸ்டர் பாடத் திட்டத்தில் புதிதாகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு,அதில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) சித்தாந்தவாதிகளான விடி சாவர்க்கர், எம்எஸ் கோல்வால்கர் மற்றும் தீன்தயாள் உபாத்யாயா ஆகிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. […]
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு கேரள அரசு முழு ஆதரவை அளித்ததுடன், சுமார் 240 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியிருந்தது. ஆனால் இந்த திட்டத்தை தற்போது மத்திய அரசு கைவிட முடிவு செய்துள்ளது. ரெயில் பெட்டி தொழிற்சாலை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கும் திட்டம் இல்லை என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் சமீபத்தில் கூறினார். மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து கேரள […]