10 வயது முதல் 50 வயத்துக்குட்பட்ட பெண்கள் சபரிமலையில் அனுமதிக்கபடுவதில்லை என்ற நடைமுறைதான் தற்போதும் தொடரும். – கேரள தேவசம் போர்டு. 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டது போல கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட பெண்கள் அனுமதிக்கப்படுவர் என கேரள தேவசம் போர்டு அண்மையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஐயப்ப பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பலத்த எதிர்ப்பை உண்டாக்கியது. […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதி அமர்வு கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கினர். இதற்கு ஐயப்பன் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், இரண்டு வருட கொரோனா கட்டுப்பாடுகள் என்பதாலும், […]
முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு அளித்துள்ள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியாறு அணை மூலம் தமிழக கேரள மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த அணை பாதுகாப்பாக இல்லை என கேரள அரசும், பாதுகாப்பாக இருக்கிறது என பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடுத்துள்ளனர். அந்த வழக்குகள் […]
கேரளா:சபரிமலைக்கு வரும் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா நெகடிவ் (ஆர்டி-பிசிஆர் சோதனை) சான்றிதழ் தேவையில்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது. மிகவும் பிரபலமான சபரிமலை திருவிழாவை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கேரள அரசு, ஆர்டி-பிசிஆர் சோதனை சான்றிதழ் இல்லாமல் சபரிமலை யாத்திரைக்கு 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அனுமதிக்கலாம் என்று அறிவித்துள்ளது.எனினும்,குழந்தைகள் சோப்பு, சானிடைசர், முகமூடி போன்றவற்றை வைத்திருப்பதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்யுமாறு பெற்றோர்கள் அல்லது குழந்தைகளுடன் வரும் பிற […]
தமிழகம்:முல்லைப் பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்ததற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கியதற்கு கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.ஆனால்,அதன்பிறகு மரம் வெட்டுவதற்கு தந்த அனுமதியை கேரள அரசு ரத்து செய்தது. இந்நிலையில்,தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை […]
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கேள்வி கேட்க துணிவின்றி நீர்வளத்துறை அமைச்சர் காமெடி செய்து வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையிலும்,அணை நீர்மட்டத்தை 142 அடிவரை தேக்காமல் கேரளாவிற்கு நீர் திறந்து விட்டதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் படகில் சென்று […]
முல்லைப் பெரியாறு அணை பழமையானது என்றும்,அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைத்தால் அணைக்கு சேதம் ஏற்படும் என்றும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கேரள அரசுடனான நல்லுறவை பேணி பாதுகாக்கும் அதே வேளையில் முல்லை பெரியாறு பாசன விவசாய பிரதிநிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக […]