சட்டசபைக்கு முகமூடி மற்றும் கையுறையுடன் வந்த குட்டியாடி தொகுதி எம்எல்ஏவால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் நிபா வைரஸின் தாக்குதலுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நோய்தொற்று பரவாமல் இருக்க மக்கள் அனைவரும் மூகமூடி மற்றும் கையுறைடன் வெளியில் செல்கிறார்கள். சுற்றுலாவுக்கு வெளியூர் பயணிகள் யாரும் வர வேண்டாம் எனவும் கேரள சுற்றுலா துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுளது. இந்நிலையில் இன்று சட்டசபை கேள்வி நேரத்தின்போது குட்டியாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ பரக்கல் அப்துல்லா, […]