கடந்த 2020-ஆம் ஆண்டு முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவ தொடங்கியது. இந்த கொரோனாவால், கோடிக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டு அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, சமீப காலமாக கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒரு சந்தர்ப்பவாதி – கேரளா முதல்வர் இருப்பினும், அங்கங்கே கொரோனாவின் தாக்கம் இருந்த வண்ணம் தான் […]
இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத் தான் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு இல்லையா? என ஜோதிமணி எம்.பி கேள்வி 2018-19ல் கேரளா பெருவெள்ளத்தின்போது நிவாரணமாக வழங்கப்பட்ட, 89 டன் அரிசிக்கான தொகை, 205.81 கோடியை தரச்சொல்லி கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, திரு.மோடியின் நண்பர்கள் வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்தபின் நாட்டை விட்டு பத்திரமாக அனுப்பிவைக்கப்படுவார்கள்.ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த நிவாரணத்தை […]
கேரளாவில் இன்று முதல் பேருந்து, ஆட்டோ ,டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து,பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கட்டணம் உயர்த்தப்படும் எனவும் சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்,பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில், அரசு பேருந்தில் குறைந்த […]
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கேரள அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு கேரள அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதன்படி அக்கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்காக 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி தரவேண்டும் என்றும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கத்தை அளவிடும் கருவிகளை அமைக்க கேரள வனத்துறை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற […]
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை எதிர்த்து திமுக அரசு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,இது மட்டுமல்லாமல் இதனை பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மத்திய […]
தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று,கொல்லம்,இடுக்கி,வயநாடு, பத்தனம்திட்டா,பாலக்காடு,திருவனந்தபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (ஜன.14) பொங்கல் விடுமுறை அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 ஆம் தேதியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரி,கேரள முதலமைச்சருக்கு,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில்,தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பண்டிகைக்கு உள்ளூர் […]
கேரளா மற்றும் தமிழகத்திற்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு விளக்கம். முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டனி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் சார்பில் கூறுகையில், கேரளாவின் இடுக்கி பகுதியில் இருக்கக்கூடிய முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக, புதிதாக அணை அமைக்க வேண்டும் என்ற […]