கேரளாவில் கருப்பு காய்ச்சல் என்ற அரிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வாலிபருக்கு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்த நோய்க்கு நர்சு உள்பட 18 பேர் பலியானார்கள். இன்னும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய் வவ்வால் மூலம் பரவுவதாக கூறப்பட்டது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க […]