Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் பற்றி தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். சினிமாத்துறையில் கேப்டன் விஜயகாந்த் பற்றி பாராட்டதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படங்களில் டூப் போடாமல் நடிப்பதில் இருந்து பிரபலங்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்தது வரைக்கும் கேப்டனை பலரும் பாராட்டி தான் பேசி இருக்கிறார்கள். அந்த வகையில், விஜயகாந்துடன் பல படங்களில் பணியாற்றிய தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய […]
Vijayakanth : படக்குழு குளிரில் நடுங்கிய காரணத்தால் கேப்டன் விஜயகாந்த் சரக்கு கேட்டுள்ளார். கேப்டன் விஜயகாந்துடன் படங்களில் நடித்த பிரபலங்கள் பலரும் பேட்டிகளில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த அனுபவங்கள் பற்றி பேட்டிகளில் தெரிவிப்பது உண்டு. அந்த வகையில், விஜயகாந்துடன் சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் நடித்த சௌந்தர் அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களுக்காக கேப்டன் விஜயகாந்த் சரக்கு கேட்ட தகவலை கூறியுள்ளார். இது குறித்து பேசிய சௌந்தர் ” விஜயகாந்த் போல ஒரு வல்லல் மனம் கொண்ட […]
Vijayakanth: கேப்டன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் தியாகு, விஜயகாந்த் பற்றிய ஒரு சுவாரிஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது அம்மா இறந்த செய்தி கேட்டு விஜயகாந்த் வந்த தருணத்தை பகிர்ந்து கொண்டார். READ MORE – ப்ரோ நமக்கு செட் ஆகாது! சூர்யாவின் ஹிட் பட வாய்ப்பை நிகாரித்த விஜய்? திரைத்துறையை தாண்டி விஜயகாந்த் செய்த நல்ல விஷயங்களை பற்றி பல பிரபலங்கள் பல பேட்டிகளில் பேசியிருக்கின்றனர். ஆனால், விஜயகாந்திடம் […]
கடந்த டிசம்பர் 28-ம் தேதி தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு கட்சி தொண்டர்களும், ரசிகர்களும், பிரபலங்களும், தலைவர்களும் 2 நாட்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் உடல் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு… இன்று முதல் விசாரணை..! இதனால், தற்போது வரை தினமும் விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் […]
நடிகர், தேமுதிக நிறுவன தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், அரசியலில் ஒரு துணிச்சலான, தைரியசாலியை இழந்துவிட்டோம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. ஏனென்றால், ஜெயலலிதா, கலைஞர் இருக்கும் காலத்திலேயே அரசியல் களம் கண்டவர் கேப்டன் விஜயகாந்த். இதனால், அவரது அரசியல் பயணம் பலருக்கும் ஒரு […]
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நினைவிடத்தில், இன்று நடிகர் விஷால், ஆர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின் நடிகர்கள் விஷால், ஆர்யா பொதுமக்களுக்கு உணவு வழங்கினர். வெளிநாட்டிலிருந்து இன்று சென்னை திரும்பிய விஷால் காலை 11 மணியளவில் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில், விஜயகாந்த் காலடியில் விழுந்து கும்பிட்ட விஷால், படப்பிடிப்பு காரணமாக கேப்டனின் இறுதி ஊர்வலத்துக்கும் நல்லடக்கத்திற்கும் வரமுடியவில்லை என கதறி அழுதபடியே மன்னிப்பு கோரினர். அஞ்சலி செலுத்திய பிறகு, நடிகர் […]
கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் செய்த உதவிகள் என்றுமே பலருடைய மனதில் நிற்கும் என்றே சொல்லலாம். அவர் செய்த உதவிகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால் சாப்பாடு போட்டு மற்றவர்கள் சாப்பிடுவதை அழகு பார்த்தது தான் என்றே சொல்லலாம். விஜயகாந்த் மறைவு பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் அவர் செய்த உதவிகளை பற்றி பேசி வருகிறார்கள். அந்த வகையில், பசியை போக்குவதற்காக விஜயகாந்த் ரயிலை நிறுத்திய […]
தேசிய முற்போக்கு திராவிடர் கழக (தேமுதிக) தலைவர் கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் முதலில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தார்கள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். கேப்டன் விஜயகாந்த் நினைவுகள் 1952…2023.! அதன் பிறகு விஜயகாந்த் உடலானது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அங்கு […]
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் தொடங்கி 2.30 மணி நேரத்திற்கு மேலாக பயணித்து தேமுதிக அலுவலகம் வந்தடைந்தது. வழிநெடுக மேம்பாலங்கள், சாலைகள், வணிக வளாகங்கள், மொட்டை மாடி என அனைத்தில் இருந்தபடியும் மக்கள் கண்ணீர் சிந்தினர். மலர்களால் அலங்கரிக்கபட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடலை மனம் நொந்து அனுப்பி வைத்தனர். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர். இப்பொது, குண்டுகள் முழங்க, […]
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் அவரது உடல், தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், விஜயகாந்தின் இறுதி சடங்கில் ஆளுநர், முதல்வர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, அவரது உடலுக்கு 72 துப்பாகி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், தேமுதிக அலுவலகம் காவல்துறையின் […]
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்தின் உடல் மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் இன்று காலை வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை தீவுத் திடலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீருடன் […]
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை நிமோனியா காரணமாக உயிரிழந்தார். தற்போது, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவருடைய உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சற்றுநேரத்தில் தீவு திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்லும் கேப்டன் விஜயகாந்தின் உடல், மாலை 4 மணிக்கு மேல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அவரது இறுதி சடங்கை காண […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி கேப்டன் விஜயகாந்த்தின் உயிர் பிரிந்தது. விஜயகாந்த் மறைவை அறிந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் என அனைவரது மனதையும் வெகுவாக பாதித்தது. தற்பொழுது அவருடைய உடல் சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரளான தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி […]
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக சென்னை தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவுச் செய்தியை தாங்க முடியாத மக்கள் சென்னை தீவுத் திடல் பகுதிக்கு தொண்டர்கள் பிரபலங்கள் என கூட்டம், கூட்டமாக சென்று நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி கேப்டன் விஜயகாந்த்தின் உயிர் பிரிந்தது. விஜயகாந்த் மறைவை அறிந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர், தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் என அனைவரது மனதையும் வெகுவாக பாதித்தது. நேற்று தனியார் மருத்துவமனையில் இருந்து முதலில் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் […]
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், சக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் செலுத்தி வருகின்றனர். அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (29.12.2023) வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு மேல் அவருக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு கட்சி அலுவலகத்திலேயே […]
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை […]
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலை 6.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி.! அரசு மரியாதை அறிவிப்பு.! அதன்பிறகு அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. […]
நடிகர் விஜயகாந்த் பல ஹிட் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தது ஒரு புறம் இருந்தாலும் மற்றோரு பக்கம் அவர் செய்த உதவிகள் மற்றும் அவர் செய்த நல்ல விஷயங்களே அவரை மக்களுக்கு பிடிக்க உதவியாக அமைந்தது என்றே சொல்லலாம். சாப்பாடு மற்றும் பிரபலங்களை பிரச்னையில் இருந்து விஜயகாந்த் காப்பாற்றியது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், அதனையும் தாண்டி தயாரிப்பாளர்களின் கஷடத்தை உணர்ந்து விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் படங்களில் நடித்து இருக்கிறாராம். அந்த வகையில், விஜயகாந்த் இயக்குனர் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில், விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. பின்னர், அவரது மார்பில் அதிக சளி தேங்கி இருந்ததன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சைக்காகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். […]