பாஜகவோடு ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்தால் அதிமுகவுக்கு லாபம் தான் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார். அதிமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை துவக்கி விட்டோம். அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யப்படும். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் அதிமுக தொண்டர்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவில் இணைந்தால் அதிமுகவுக்கு […]