கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை குறைக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களை கலைப்பது குறித்த சட்டமசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றன. கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டாக குறைக்க எதிர்ப்பு தெரிவித்தும் […]
மகளிர் குழுக்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் ரத்து செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆணையில், 13.08.2021 அன்று தாக்கல் செய்த திருத்த வரவு செலவு திட்டம் 20212022 இல், “கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். கடன் வழங்குவதற்கு ஏதுவாக இச்சங்கங்களுக்கு பல்வேறு கட்டங்களில் நிதிநிலை வழங்குவதற்கான நடைமுறையை அரசு வகுக்கும். இதற்காக 600 கோடி ரூபாய் […]
கூட்டுறவு சங்கங்களின் 26 துணை பதிவாளர்களை பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 26 துணை பதிவாளர்களை பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விடுப்பு ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்க பதிவாளரின் அதிகாரம் செல்லுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவரை சஸ்பென்ட் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக நீதிமன்றம் கூறுகையில்: “கூட்டுறவு சங்கங்களில் பதவி ஏற்பவர்கள் அதன் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.நிர்வாகிகள் விதிமீறலில் ஈடுபட்டால் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.அதன்படி,முறைகேட்டில் ஈடுபடும் தலைவர் துணைத்தலைவரை சஸ்பென்ட் செய்ய பதிவாளருக்கு […]