சென்னை:தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,தலைமைச்செயலகத்தில் இருந்து இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் கிராமப் பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவுத்துறை இன்றியமையாப் பங்கினை ஆற்றி வருகின்றன.மிகப்பெரிய சமூகப் பொருளாதார இயக்கமான கூட்டுறவு இயக்கம், வறுமையை ஒழிக்கவும், சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. அந்த வகையில், கூட்டுறவுத் துறையின் 2021-22ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறை மூலம் 303 […]