நவம்பர் 28-ஆம் தேதி பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்நிலையில் வருகிற நவம்பர் 29ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என மக்களவை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். எனவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை […]
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று அனைத்து கட்சிகள் சார்பில் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பிற நாட்டு மக்கள் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் பலரும் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிப்பதற்காகவும், அதனை […]
மின்னல் வேகத்தில் பரவிவரும் கொடிய கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழக தலைமைச்செயலகத்தில் கொரோனா தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.பின் முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 50-ல் இருந்து 67 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5 பேர் குணமாகி […]
இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், கொரோனா அச்சத்தால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், அரசின் வரி வருவாயை பெருக்கும் நோக்கில் சில பொருட்கள் மீதான வரியை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்மார்ட்போன்கள், ஜவுளி, காலணி, உரம், சூரியசக்தி உபகரணங்களுக்கான வரி உயர்த்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன்களுக்கு 12 சதகிகித வரி விதிக்கப்படும் […]
டில்லியில் நேற்று மார்ச்.,04ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர், பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான ஆவணங்களை வங்கிகள் அரசிடம் சமர்ப்பித்துள்ளன. கடந்த 2017 ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. தற்போது 18 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இனி மீண்டும் வங்கிகளின் இணைப்பின் பிறகு 12 பொதுத்துறை […]