திருவனந்தபுரம்: மாநிலங்களவை துணை சபாநாயகர் குரியன் உள்ளிட்ட கேரளாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மூன்று எம்.பி.க்களின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைய உள்ளது. தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு எம்.பி.க்களை பெற முடியும். மீதமுள்ள ஒரு எம்.பி காங்கிரஸ் கட்சி பெற முடியும். குரியனை மீண்டும் தேர்வு செய்ய முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 77 வயதாகும் குரியனை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்ப விரும்பவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் பால்ராம் […]