கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக்கழிவுகளை கையாளுவதில் தற்போதைய நிலையே தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை அப்படியே கடலில் கொட்டுகிறார்கள் எனவும்,அணுக்கழிவுகளை கையாளுவதில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை எனவும்,எனவே இதனை முறையாக கையாளுவதற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி கடந்த 2019 ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து,அணுக்கழிவுகளை கையாளுவதில் முறையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என […]
கூடங்குளம் அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்க அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்க அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அளித்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற திமுக உறுப்பினர்(எம்பி) டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சேமிக்கப் படும் அணுக்கழிவுகளை […]