கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை மத்திய அரசு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது. இதற்கு அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அணுக்கழிவு […]