நெல்லை மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற எஸ்ஐ பார்த்திபன் மீது சங்கர், மணிகண்டன் ஆகியோர் அரிவாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு நெல்லை மாவட்ட பழவூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் அம்பலவாணபுரம் பகுதியில் ரோந்து பணியில். அப்போது அந்த பகுதியாக சங்கர் மணிகண்டன் ஆகியோர் டெம்போவில் மணல் கடத்தி வந்துள்ளதாக தெரிகிறது. அந்த டெம்போவை சோதனையிட்டு , அனுமதி சீட்டை எஸ்ஐ பார்த்திபன் சரிபார்த்துள்ளார். அப்போது, சங்கர் மணிகண்டன் ஆகிய இருவரும் […]
கூடங்குளம் அணுமின்நிலைய வாசலில் 100க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் முற்றுகை போராட்டம். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து, 1000க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் மக்களுக்கு பணி வழங்காமல், வெளி மாநிலத்தவர்களுக்கு தந்ததை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்ட 139 பேரில் உள்ளுறை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என போராட்டக்காரர்கள் குற்றசாட்டுகின்றன. திமுக மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி […]
கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையத்துக்கு அனுமதி அளித்துள்ளதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற தலைவரும், நெல்லை மாவட்டம் ராதாபுரம் எம்எல்ஏயுமான அப்பாவு, கூடங்குளம் அணுக்கழிவுகளை இப்பகுதியில் வைக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று போராட்டம் நடத்தினர். மக்கள் சார்பாக நானும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், இல்லாதபோதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளேன். எனவே, அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி […]
மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அணுக்கழிவு சேமிப்பு பாதாள மையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதை அடுத்து, அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து […]
கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 வது மற்றும் 4 வது அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.இந்த ஒப்புதல் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இதற்கு,சுற்றச்சூழல் ஆர்வலர்கள்,அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில்,முதல் இரண்டு அணு உலைகளின் கழிவுகளை எங்கே வைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் புதிய வளாக இயக்குனராக டி.எஸ்.சௌத்ரி நியமிக்கபட்டுள்ளார்.முன்பு இருந்த வளாக இயக்குனர் ஜின்னா மும்பையில் உள்ள அணுமின் நிலைய தலைமை அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை இந்திய அணுமின் கழக தலைவர் எஸ்.கே.சர்மா பிறப்பித்துள்ளார்.