டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வு, டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கு பயனளிக்கும். இம்மாதம் 1ம் தேதியில் இருந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக்கில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் இதன் முலம் […]