இந்திய நாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில், பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், முப்படை தளபதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோன்று, மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி […]