கருத்து சுதந்திரம் கேட்கும் இடதுசாரி எதிர்க்கட்சிகள், ஏன் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என குஷ்பூ கேள்வி. இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய […]