கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மருதமோன்பள்ளி சாலையில் ஒயூர் பகுதியில் சாரா ரெஜி எனும் 6 வயது சிறுமி நேற்று மாலை சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். மாலை வழக்கம் போல தான் செல்லும் டியூசனுக்கு அந்த சிறுமி, தனது 8 வயது சக மாணவனுடன் சென்றுள்ளார். அப்போது வெள்ளை நிற மாருதி டிசையர் காரில் வந்த ஒரு கும்பல் சிறுமியை மாலை 4.45 மணி அளவில் கடத்தியுள்ளது. அதனை 8 வயது சிறுவன் தடுக்க முற்பட்டுள்ளான். […]
மும்பையில் உள்ள ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயிடம் இருந்து 5 வயது குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள குர்லா ரயில்வே நிலையத்தில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது குழந்தையை 24 வயது பெண்மணி கடத்தி சென்றுள்ளார். கடத்தப்பட்ட குழந்தையின் தாயான ஷப்னம் தைடே, சனிக்கிழமை கேட்டரிங் வேலைக்காக குர்லாவுக்குச் சென்றுள்ளார். திட்வாலாவில் உள்ள தனது வீட்டிற்குச் செல்லும் கடைசி ரயிலை தவறவிட்டதால், மறுநாள் இரயிலில் செல்ல முடிவு செய்து தன் மகனுடன் ரயில் […]
அசாம் மாநிலம் கர்பி அங்லாங் பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கர்பி அங்லாங் பகுதியில் உள்ள பஞ்சரி காசரி கிராமம் வழியாக ஒரு கார் சென்றுள்ளது. டோக்மோகா நோக்கி சென்ற அந்த காரை பொதுமக்கள் சிலர் வழிமறித்து விசாரித்துள்ளனர். அப்போது காருக்குள் இருந்த நபர்களின் நீண்ட தலைமுடி மற்றும் அவர்களின் தோற்றத்தைப் பார்த்து குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து வெளியே இழுத்துப்போட்டு […]
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர், களியம் கிராமத்தில் சென்னையில் இருந்து சாமி கும்பிட கோவிலுக்கு சென்றவர்களை கடந்த மே மாதம் 9-ந்தேதி குழந்தை கடத்தல் கும்பல் என கருதி கிராம மக்கள் அடித்து உதைத்தனர். இதில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி (வயது 65) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் வந்த உறவினர்களான மோகன்குமார், சந்திரசேகரன், கஜேந்திரன், வெங்கடேசன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு […]