ஒவ்வொரு புதன் கிழமையும் குறை தீர்ப்பு முகாம் – டிஜிபி அதிரடி உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் வாரந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் ஆகியோர் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.