ஃபிஃபா உலகக்கோப்பையில் முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 32 அணிகளுடன் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் தற்போது 4 அணிகளுடன் அரையிறுதி போட்டியை நெருங்கியுள்ளது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் லுஸைல் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. அர்ஜென்டினா மற்றும் குரோஷியா இரு அணிகளும் தங்களது காலிறுதியில் பெனால்டி முறையில் […]