குரூப் II, II A தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு-II/IIA (தொகுதி-II/IIA) இதற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறுகட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. […]