டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப் – 2 முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (டிஎன்பிஎஸ்ச), தொகுதி 2 மற்றும் 2A பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு தாள்களுக்கும் தேர்வு 25.2.2023 அன்று நடைபெற்றது. 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வினை 51,000-க்கும் மேற்பட்ட […]
குரூப் 2 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 6,151 ஆக அதிகரித்து டி.என்.பி.எஸ்.சி (TNPSC) அறிவித்துள்ளது. முன்னதாக, குரூப் 2 பணியிடங்களில் 5,413ஆக இருந்த நிலையில், 738 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6,151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 12இல் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வரும் 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் பிப்ரவரியில் நடத்தப்படும் என்றும்,குரூப் 4 தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கான போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தி வருகிறது. இந்த நிலையில்,டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் , தமிழ் மொழிதேர்வை கட்டாயப்படுத்தி […]