குமரி மாவட்டத்தில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளம்!
குமரி மாவட்டத்தில் கோடை வெயில் கடுமையாக இருந்து வந்தது. இந்தநிலையில் கோடையின் உச்சமான அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியதில் இருந்து அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் ஜில்லென்ற இதமான சீதோஷ்ண நிலையும் காணப்பட்டது. நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டாலும், இரவில் குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் விடிய, விடிய கனமழையாக கொட்டியது. குறிப்பாக குளச்சல், குலசேகரம், திருவட்டார், களியக்காவிளை, கருங்கல், மார்த்தாண்டம் பகுதிகளில் பலத்த […]