குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்த அறிக்கையை முப்படைகளின் விசாரணைக்குழு சமர்ப்பித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த விமானி வருண் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். […]