குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என நீதிபதிகள் குற்றச்சாட்டு. கொலை வழக்கில் கைதான திண்டுக்கல்லை சேர்ந்த 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீதர், ராஜ்குமார், ராஜேஸ்வரன், கருணாகுமார், ரஞ்சித் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என்றும் குண்டர் தடுப்பு காவல் விதிகளை மனதில் கொள்ளாமல் […]
கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் 18 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குண்டர் சட்டம் எனும் பிணையில் வெளியில் வர முடியாத குண்டாஸ் சட்டத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நடப்பாண்டில் மட்டும் சென்னையில் 408 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. மேலும், நன்னடத்தை காரணமாக பிணையில் வந்ததில் இதுவரை 7 பேர் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டு […]
பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானதையடுத்து,சென்னை சைபா் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதான மதன்: இதனையடுத்து,பப்ஜி மதன் தலைமறைவான நிலையில்,அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.பின்னர்,போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி தருமபுரி அருகே பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். குண்டர் சட்டம் – சிறையில் அடைப்பு: […]
பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானதையடுத்து,சென்னை சைபா் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து,பப்ஜி மதன் தலைமறைவான நிலையில்,அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.பின்னர்,போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி சேலத்தில் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். இதனையடுத்து,பப்ஜி மதன் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்த நிலையில்,சிறையில் […]
விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதான ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கைதான […]
தமிழகத்தில் ஏப்ரல் 27 வரை ஒரு மாதத்துக்கு ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டம் நடத்த டிஜிபி உத்தரவு. கஞ்சா மற்றும் குட்கா விற்பறோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என காவல்துறைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 27 வரை ஒரு மாதத்துக்கு ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்த டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டம் நேற்று தொடங்கிய நிலையில், காவல்துறை […]
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்த நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவையை அடுத்த வெள்ளலூரில் தந்தை பெரியாரின் உருவ சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை மீது கடந்த 8-ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிந்து, தலைப்பகுதியில் குங்குமத்தை தூவி அவமரியாதை செய்துள்ளனர். இது தொடர்பாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இருவர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தது தெரியவந்தது. பின், போலீசார் விசாரணை மேற்கொண்ட […]
‘சாட்டை’ துரைமுருகன் மீது பழிவாங்கும் போக்குடன் குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சீமான். இதுதொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள சீமான், தமிழ்ந்தேசிய வடகாவியமானர் தமட சாட்டை அரை முருகன் மீது அரசியல். காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தொடரப்பட்ட புனைவு வழக்குகளில் பிணையில் வெளி வந்துவிடக்கூடாது என்ற பழிவாங்கும் போக்குடன் குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சமாகும். தம்பி துரைமுருகன் சமூக ஊடகம் மூலம் ஏற்படுத்தும் […]
திருவள்ளூர்:ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தரமற்ற உணவால் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக கூறி வதந்தி பரப்பிய புகாரில் சிறையில் உள்ள பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு […]
எஸ்.ஐ. பூமிநாதனை கொலை செய்த மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பூமிநாதன் கடந்த 21-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஆடுகளை எடுத்துச் செல்வதை பார்த்துள்ளார். அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் பூமிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போது, கீரனூர் பள்ளப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து விசாரித்துள்ளார். […]
முந்திரி பருப்பு லாரியை கடத்தியை வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் மீது பாய்ந்த குண்டர் சட்டம். தூத்துக்குடியிலிருந்து லாரியில் முந்திரியை கடத்தியதாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் கடந்த நவம்பர் 27-ஆம் கைது செய்யப்பட்டார். 12 டன் முந்திரி கடத்தல் தொடர்பாக ஜெபசிங் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடைபெற்றது. முந்திரி கடத்தலில் ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன்,மாரிமுத்து, ராஜ்குமார், செந்தில்குமார் மற்றும் பாண்டி ஆகியோர் […]
தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி. பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானது. இதுகுறித்து சென்னை சைபா் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி சேலத்தில் மதன் கைது செய்யப்பட்டாா். பின் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 5-ஆம் தேதி கைது […]
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசும் சீமானை குண்டாசில் கைது செய்ய வேண்டும் என கே.எஸ் அழகிரி ட்வீட். இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி, தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் பேசி வருகிறார் என்று குற்றசாட்டியுள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் […]
கூலிப்படையினர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து நேற்று மாலை நான்கு மாவட்ட எஸ்பிகளுடன் நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பின்பதாக பேசிய அவர், தமிழகத்தில் கூலி படையினரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும், நெல்லை, திண்டுக்கல் […]