உடலுக்கு கேடு விளைவிக்கும் குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் மே 23 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில்,தற்போது குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்கள் தயாரித்தல்,விநியோகித்தல் ஆகியவற்றுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,தமிழகத்தில் குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே தடை விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் போதை பொருள் முற்றிலும் தடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருள் முற்றிலும் தடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று உறுதியளித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்போர் ,கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குட்கா விஷயத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழக அரசு நிச்சயம் தயங்காது. தமிழகத்தில் இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 11,247 பேர் […]