அதிமுகவில் பிரச்சனை காரணம் குடும்ப அரசியல் தான் என தம்பிதுரை எம்.பி. பேச்சு. குடும்ப அரசியல் காரணமாகதான் அதிமுகவில் பிரச்சனை ஏற்பட்டது என அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் குடும்ப அரசியல், ஊழலுக்கு எதிராக அதிமுக பிரச்சாரம் மேற்கொள்ளும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் 10 ஆண்டுக்கு முன்பு நீக்கப்பட்டோர் அவரது புகைப்படத்தை வைத்து நாடகமாடுகின்றனர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களால் அதிமுக ஒன்றிணையும் என்று எப்படி கூற முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் குடும்ப பக்தி, தேச பக்தி என இரண்டு வகையான அரசியல் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று பாஜக கட்சியின் நிறுவப்பட்டு நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது டெல்லியில் உள்ள தலைமை அலுவலகம் முன்பதாக உள்ள பாஜக கட்சி கொடியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் ஏற்றி வைத்துள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு […]
குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம். நம்மை நாமே ஆளவேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி போராடினார். இன்று நாடாளுமன்றத்தில் நடந்த அரசியல் அமைப்பு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பே ஒன்றுபடுத்துகிறது. நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின தொகுப்பு மட்டுமல்ல பெரும் பாரம்பரியம். எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நாள்தான் எதிரிகள் […]