இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம். தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய தமிழக முதல்வர் அவர்கள், சட்டப்படியான சமத்துவம் மற்றும் சட்டப்படியான பாதுகாப்பை எந்த அரசும் மறுக்க முடியாது என்றும், 1956 குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில், ஒரு நபர் குடியுரிமை பெற மதம் என்பது அடிப்படையாக இல்லை. ஆனால் தற்போது மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் என்பது, […]
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கொடுப்பதில் உணர்வுப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு மதுரைக்கிளையில் வாதம் செய்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2009 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2019 ஆம் ஆண்டு மனுதாரர் அனைவரும் குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும், இந்த […]
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்த கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை பாரிமுனை குறளகம் அருகே நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென அரசை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் […]