இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா வருகின்ற மே 14 ஆம் தேதியுடன் ஓய்வு பெரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை 24 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட நிலையில்,சுசில் சந்திரா 24 வது தலைமை […]
தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழா முடிவடையும் தருணத்தில் தேரை நிலைநிறுத்துவதற்காக ஊரின் எல்லையில் தேரை திருப்ப முயன்றபோது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு முதல்வர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து […]
இரண்டு நாள் பயணமாக உத்திரப்பிரதேச பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். குடியரசு மாளிகை அறிவித்துள்ள அறிவிப்பின்படி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள கான்பூருக்கு பயணம் செய்யவுள்ளார். இவர் நவம்பர் 24 ஆம் தேதி அன்று சௌத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் பங்கு கொள்ள உள்ளார். அவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார். மேலும், நவம்பர் 25 ஆம் தேதி அன்று ஹர்கோர்ட் பட்லர் […]
உத்திர பிரதேச(உ.பி) மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடிதம் எழுதியுள்ளது. உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்தனர்.இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில்,உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் […]
முன்னாள் எம்பி சந்தன் மித்ரா மறைவு இந்திய பத்திரிகைத் துறையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு, மாநிலங்களவை எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா போன்ற தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்,இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது: “சந்தன் […]