சென்னை மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, குடியரசுதின அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வார காலம் பொதுமக்கள் பார்வைக்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் செய்தித் துறை சார்பில் விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கண்டுகளிக்கின்ற வகையில் […]