கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கும்பலில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் அதே ஏப்ரல் மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த கோடநாடு சம்பவத்தில் காவல்துறை 10 பேரை கைது செய்த நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு, உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. […]