தஞ்சையில் விவசாய தொழிலார்கள் கூலியான நெல் அளவை உயர்த்தி கேட்டதால் எரித்துக்கொள்ளப்பட்ட கொடூரம் அரங்கேறி 51 வருடம் ஆகிவிட்டது. தொழிலாளிகள் அப்போது வாங்கும் நெல் அளவை விட அரைப்படி நெல் அதிகமாக கேட்டதற்காக 44 பேர் எரித்து கொல்லப்பட்டனர். 1968ஆம் ஆண்டு தமிழக நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை மற்ற இடங்களை போல பெரும்பாலும் நிலச்சுவான்தாரர்கள் நிலத்தை நிர்வகித்து வந்தனர். அவர்களிடம் கீழ்வெண்மணி விவசாய தொழிலாளர்களும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் வேலைபார்த்ததற்கு நெல்லை கூலியாக […]